Sunday, November 28, 2010

அப்பன்னாவின் ஊன்று கோல்


பெருநிலத்தின் கதைகள் : 02 .- GTN இற்காக நவராஜ் பார்த்தீபன்

அப்பன்னா தன் கால்களில் ஒன்றை இழந்து போயுள்ளார் என்பதை அறிந்த பொழுது அவர் தன் துருப்பிடித்த சைக்களில்களில் கிளிநொச்சி நகரமெங்கும் அலைவதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கிளிநொச்சியில் மோட்டார் சைக்களில்கள் அதிகரித்த காலத்திலும் அப்பான்னா சைக்கிளில்தான் செல்லுவார். நான்காம் வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது வயல்களை பார்க்க செல்லும் பொழுது அவர் சைக்களில்தான் போவார். அவரது மூத்த மகளையும் கடைசி மகனையும் காலையில் பள்ளிக்கூடம் ஏற்றிக்கொண்டு வருவார். இப்பிடி சைக்கிளில் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருந்த அப்பன்னாதான் மனமெங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

நான் கிளிநொச்சியிலிருந்து அப்பன்னாவை கடைசியாய் பார்க்கும் பொழுது அவருடன் பேசவில்லை. அப்பன்னாவின் வீட்டில் நானும் யசோவும் சுபாவும் மோகனதாசும் ஒரு கொட்டில் அமைத்து அங்கு படித்துக் கொண்டிருந்தோம். நான் முதல் தடைவையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியிருந்தேன். பெறுபெறுகள் போதாத நிலையில் அப்பன்னாவின் கொட்டிலில் இருந்து யசோவும் சுபாவும் மோகனதாசும் திரும்ப பரீட்சையை எழுதுவதற்காக படித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் விடுமுறையில் வரும் பொழுது எல்லாம் அப்பன்னாவின் அந்தக் கொட்டிலில்தான் அதிக நேரம் தங்கியிருப்பேன். அது எங்களுக்கு ஒரு விடுதலையான மாளிகைபோலத்தான் இருந்தது. கிளிநொச்சியில் சமாதானம் வந்த பொழுது எங்களிடம் பியர்மீது பெரிய கனவுகள் வந்தன. ஒரு நாள் அப்பன்னாவின் கொட்டிலுக்கு நான்கு பியர் போத்தல்களை கொண்டு வந்து குடித்திருந்தோம். அப்பன்னாவுக்கு எந்த குடி பானங்களும் பிடிக்காது. நாங்கள் பியர் குடித்து விட்டோம் என்பதற்காக எங்களுடன் அவர் பேச வில்லை. அன்றிலிருந்து அப்பன்னாவுடன் எந்த உரையாடல்களும் இடம்பெறிவில்லை.

ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பும் பொழுது அப்பன்னாவின் கடைசி மகன் ஜெயக்குட்டி வந்துதான் எழுப்பி விடுவான். அவன் வந்து எனக்கு மேலே இருந்து கொண்டு என்னை அடித்து அடித்து எழுப்புவான். அப்பன்னா தேநீர் கொண்டு வந்து வைப்பார். ஏனக்கு ரொட்டித் துண்டுகள் மிக விருப்பம் என்பதால் ரொட்டித் துண்டுகளை சுடும் பொழுதெல்லாம் நந்தினி அக்கா என்ற அப்பன்னாவின் மனைவி என்னை கூப்பிடுவார். அவர்கள் படிப்பிற்காக எங்களுக்கு தந்த அந்த சிறுகுடில்இ அப்பன்னாவின் சைக்கிள் சத்தம்இ அவர்களது உபசரிப்புஇ அன்பு என்று எல்லாமே எனக்குள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

அவர்கள் கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் இருந்தவர்கள். அவர்களை குடியிருத்துவதற்காக சில நாட்களாக வவுனியா தடுப்பு முகாமிலிருந்து அழைத்து வந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்க வைத்திருக்கிறார்கள். இப்பொழுது கிளிநொச்சி மத்திய கல்லூரி ஒரு இடைத்தங்கல் முகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடசாலைக்கு அப்படி ஒரு கொடுமை வந்திருக்க கூடாது என்றுதான் எனக்கு தோன்றியது. இதற்கு முன்பு சில தடவைகள் எனது பாடசாலைக்குள் செல்ல முற்பட்ட பொழுதெல்லாம் படையினர் உள் நுழைய அனுமதி தரவில்லை. ஆனால் அன்றைய தினம் இரவு ஏழுமணியாகியிருந்த பொழுதும் உள் நுழைய படைகள் அனுமதித்திருந்தார்கள். நானும் என்னுடன் அப்பன்னாவின் கொட்டிலில் இருந்த யசோதரனும் அப்பன்னாவை பார்ப்பதற்காக உள்ளே செல்லுகிறோம். எப்பொழுதும் பாடசாலைக் கீதமும் படிப்பும் விளையாட்டும் கலை நிகழ்வும் என்று மிகுந்திருந்த இந்தப் பாடசாலை இப்பொழுது விசாரணைகளுக்கான இடையில் தங்கியிருக்கும் முகாமாக மாறியிருக்கிறது.

எங்கள் உயர்தர படிப்பின் பொழுது செயற் திட்டத்திற்காக தயாரித்த கொடி நாட்டும் இடம் சிதைந்து போயிருந்தது. அதன் சுவர்கள் கொஞ்சம் உடையாமல் கிடந்தன. நாங்கள் இனி எந்தக் கொடிகளை ஏற்றப்போகிறோம். கோடிகளை ஏற்ற வேண்டிய எந்த வெற்றிகளையும் நாங்கள் பெறவில்லை. ஆனால் அந்தக் கொடிக் கம்பம் பொருத்தும் இடங்களில் எங்களுக்கு பிடிக்காத கொடிகள் ஏற்றப்பட இருக்கின்றன. ஏற்றுக் கொள்ள முடியாத கொடிகளை நாம் இனி ஏற்க வேண்டிய நாட்கள் வரப் போகின்றன என்று மனம் உள்ளுக்குள் அந்தரித்துக் கொண்டிருந்தது.

கிளிநொச்சியை அண்டிக் குடியேறும் மக்கள் எல்லோருமே இந்தப் பாடசாலையில் சில நாட்கள் தங்கித்தான் குடியேற வேண்டும். இந்த மக்களும் மக்களின் பிள்ளைகளும் படித்த இந்தப் பாடசாலையிலும் அவர்கள் அகதிகளாக இருந்தார்கள் என்றும் ஒரு அனுபவத்தை பெறுகிறார்கள். பாடசாலையோ ஒரு அகதி முகாம்போல இருக்கிறது. அப்பன்னாவை தேடிக்கொண்டு முதலில் மெயின் கோல் எனப்படும் எங்கள் பாடசாலையின் பிரதான மண்டத்திற்குள் சென்றேன். அப்பன்னாவை எப்படி விசாரிப்பது என்றுதான் முதலில் பிரச்சினை வந்தது. அப்பனைத் தெரியுமா? ஏன்று சிலரிடம் கேட்ட பொழுது தெரியாது என்றே அவர்கள் சொன்னார்கள். அப்பன் என்றால் அங்கிருக்கும் எல்லோருக்குமே தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு என்ன அடையாளத்தை சொல்லிக் கேட்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த பொழுது என்னுடன் வந்த யசோதரன் நான் மனதிற்குள் நினைத்த மாதிரி கால் பிரச்சினையானவர் என்று விசாரித்தான். கால் இல்லாத அப்பனனா என்று கேட்க மனதுக்குள் சங்கடமாக இருந்தது.

அங்கிருந்த சனங்கள் எங்களைப் பார்த்து கேட்டார்கள் கால் பிரச்சினை என்றால் அவருக்கு காலில் காயமா? அல்லது கால் இல்லையா? அல்லது எவ்வளவுடன் கால் இல்லை என்று. எங்களுக்கு மிகுந்த சங்கடமாக இருந்தது. அவருக்கு கால் இல்லை. முலங்ககாலுக்கு கீழாக இல்லை என்று நான் சொன்னேன். அப்படி இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று விட்டு அந்த மண்டபப் பக்கம் போய் பாருங்கள் என்றார்கள். எல்லா மண்டபகங்களிலும் சனங்கள் இருந்தார்கள். சனங்கள் வரிசையாக படுத்திருந்தார்கள். மிக நெருக்கமாக தங்கியிருந்தார்கள். கொண்டு வரப்பட்ட பொருட்கள் எல்லாம் அவர்களை சுற்றிக் கிடந்தன. எல்லாப் பொருட்களும் அகதிச் சின்னங்கள் பொறிக்கப்பட்டும் தொண்டு நிறுவனச் சின்னங்கள் பொறிக்கப்பட்டும் இருந்தன.

பலர் ஓவரை ஒருவர் இன்றுதான் சந்தித்திருக்கிறார்கள். தங்கள் நண்பர்கள் சொந்தங்கள் உயிருடன் உள்ளார்கள் என்பதை கணுகிறார்கள். அனுபவங்களையும் கொடுமைகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். மறக்க முடியாத இரவாக நான் உணரத் தொடங்கினேன். பார்பவர்களை எல்லாம் அப்பன்வானை விசாரித்துக்கொண்டு அலைந்தேன். அவர் எங்காவது ஊன்று கோல்களுடன் இருப்பார் ஊன்று கோல்களைதான் தேடினேன். ஆனால் ஊன்று கோல்கள் எல்லா மண்டபங்களிலும் அநேகமானவர்களுக்கு பக்கத்தில் இருந்தது. ஆட்களை தாண்டிச் சென்று ஊன்றுகோல்களுக்கு பத்தில் யார் படுத்திருக்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருந்த பொழுதும் அவர்களை என்னால் தாண்டிச் செல்ல முடியாதிருந்த அதேவேளை அவர்களின் தூக்கத்தை குழப்பக் கூடாது எனவும் மனம் சொல்லிக்கொண்டிருந்தது.

ஊன்று கோல்கள் தூரத்திலும் தெரிந்தன. அங்கேயொரு ஊன்று கோல் கிடக்கிறது என்று என்னை யசோதரன் அழைத்துக்கொண்டு போனான். இப்பொழுது நிறையப் பேர் ஊன்று கோல்களை பாவிக்கிறார்கள். எல்லோருமே யுத்தத்தின் பொழுது கால்களை இழந்தும் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளவர்கள். கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்ட பொழுது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வேளை பலருக்கு ஒற்றைக் கால் கட்டையாக போய் விட்டது. இரண்டு கால்களை இழந்தவர்களும் இருக்கிறார்கள். பாடசாலைக்கு சிறுவர்கள் ஊன்று கோல்களுடன் சொல்லுகிறார்கள். பல்கலைக் கழகத்திற்கு ஊன்று கோல்களுடன் வரும் மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். ஓற்றை ஊன்று கோல்களையும் இரட்டை ஊன்று கோல்களையும் பயன்படுத்துபவர்கள் இருக்க ஊன்று கோல்களை பயன்படுத்தியும் நடக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள். கால்கள் பழுதுபட்டு சில சிறுமிகள் சக்கர நாற்காலிகளை பயன்படுத்தித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மெயின் கோல் எனப்படும் பிரதான மண்டபத்திற்கு சென்ற பொழுது மக்கள் அடுக்கிய மாதிரி படுத்திருந்தார்கள். மேடையிலும் அகதிகள் அவர்களது பொருட்களுடன் இருக்கிறார்கள். யாரே ஊன்று கோலுடன் மலம் கழிக்க அந்தப் பக்கம் செல்லுகிறார் என்று ஒரு அம்மா காட்டினார். கால்களை இழந்த வயதான ஒரு ஐய்யா ஊன்றுகோல்களை ஊன்றிக்கொண்டு வந்தார். அவரும் இல்லை என்ற பிறகு மற்ற மண்டபங்களை நோக்கிச் சென்றோம். இருட்டில் முகங்கள் தெரியவில்லை. அநேகமானவர்கள் முகம் தெரியாதபடி அடையாளம் தெரியாதபடி மாறியிருந்தார்கள். அதனால் அவர்களுடைய கால்களை உற்றுப் பார்த்து அப்பன்னாவைத் தேடும் கொடுமையும் நேரிட்டது.

அதிபர் அலுவலகம் பதிவகமாக இயங்கிக் கொண்டிருந்தது. அதற்கு முன்னாலும் பாடசாலை மணியடிக்கும் இடத்திற்கு பக்கத்திலும் வகுப்பறை தாழ்வாரங்களிலும் மண்டபங்களுக்கு வெளியிலும் முற்றத்திலும் என்று எங்குமே அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். முகங்களை தேடிக் கொண்டு பார்க்கிறார்கள். பழுதடைந்த உணவுகள் மணத்துக் கொண்டிருக்க சுற்றி வர இருந்த சூழல் மணமும் குப்பைகளுமாக இருந்தது. உணவுகக் கோப்பைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதி வரை அப்பன்னாவை பார்க முடியவில்லை. நாளை பகல் வந்து சந்திப்போம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வந்தேன். அதிபரது பழைய அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் ஒரு கொத்துரொட்டிக் கடையிருந்தது. அதை ஒரு அம்மா நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஒரு கொத்தை சாப்பிட்டபடி சுடரொளி கடை சுதா அண்ணன் இருந்து யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...